Thursday, 22 December 2011

கடி ஜோக்ஸ் - 2


"எல்லாம் உங்க தல விதி!", எப்படி மாட்டிக்கிட்டிங்க பாத்திங்களா?



ஒருவர் பிச்சைகாரரிடம்
நண்பர் : ஏம்பா, ஐந்நூறு ரூபா நோட்டுக்கு சில்லறை இருக்குமா .. .. ?
பிச்சைக்காரன் : நாங்களும் பேப்பர், டி.வி. நியூஸ்யெல்லாம் பார்க்கறவங்கதான் சார் .. ..

மனைவி : என்னங்க இது,,,, நடு ராத்திரியில் இப்படி எழுந்து உட்கார்ந்திருக்கீங்க?
செக்யூரிட்டி அதிகாரி : நான்தான் ஏற்கனவே உன்கிட்ட தூங்கும் போதும் உனக்கு பாதுகாப்பா இருப்பேன்னு சொன்னதை மறந்துட்டியா விமலா ,,,

வேலு : உட்காரமுடியாத தரை எது..?
பாக்கி : புளியோதரை..

கஸ்டமர் : ஏம்ப்பா காபி ஆர்டர் பண்ணினா வெறும் கப்பை மட்டும் கொண்டு வந்து வைக்கற?
வெய்டர் : நீங்கதான சார் "கப் கிளீனா" இருக்கணும்னு சொன்னீங்க.

ரமனன் : நான் எதிர்காலத்துல ஒரு டாக்டராகவோ, இல்லே ஒரு பைலட்டாகவோ ஆகலாம்னு இருக்கேன் .. ..
வேலு : எப்படியோ .. .. ஜனங்களை மேல கொண்டுபோகறதுல குறியா இருக்கே, ஹும்

காதலன் : கலா நல்லவேளை,,, 6 மணிக்குள்ள வந்து என் வயித்துல பாலை வார்த்தே ,,,,
காதலி : இல்லாட்டி ?
காதலன் : 6 மணிக்கு மேல் மாலாவை வரச் சொல்லி இருந்தேன்,,,, ரெண்டு பேர்ட்டயும் மாட்டியிருப்பேனே ,,,,

ரமனன் : அவர் ரொம்ப குண்டு தான் ஆணா அதுக்காக அந்த ஹோட்டல்ல அவரை இப்படி அவமானப்படுத்தியிருக்கக் கூடாது
பாக்கி : அப்படி என்ன பண்ணீங்க
ரமனன் : மெனுவுக்கு பதிலா "கொடேஷன்" குடுத்தாங்களாம்

நண்பர் 1 : என்னங்க இது .. .. உங்க பையன் கடிகாரத்தை டேபிள் மேலே வெச்சுட்டு, புத்தகத்தைப் படிச்சுக்கிட்டே அதைச் சுத்திச் சுத்தி வரான் .. .. ?
நண்பர் 2 : அவன் ரவுண்ட் தி க்ளாக் படிச்சுக்கிட்டிருக்கான் .. ..

No comments:

Post a Comment